அறிவிப்பு; நீக்கம்

 அறிவிப்பு

சென்னையில் இருந்து வெளியாகும் ஆயுத எழுத்து இதழில் செய்தியாளராக பணிபுரிந்து வந்த ராஜபாளையம் முத்துக்குமார், பத்திரிகை பெயரை கெடுக்கும் விதமாக தொடர்ந்து செயல்பட்டு வந்ததால், நவம்பர் மாத துவக்கத்திலேயே அவர் நீக்கப்பட்டார். மேற்படி நபரிடம் ஆயுத எழுத்து பத்திரிகைக்காக செய்திகள், விளம்பரங்களை யாரும் அளிக்க வேண்டாம். மேற்படி முத்துக்குமாருக்கும் ஆயுத எழுத்து நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இனிமேலும் தொடர்ந்து ஆயுத எழுத்து  பெயரை பயன்படுத்தி விரும்பத்தகாத மற்றும் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டால் மேற்படி நபர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்பது இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

 விருதுநகர் மாவட்ட செய்திகளுக்கு விருதுநகர் செய்தியாளர் சங்கர சுப்பு அவர்களை  தொடர்பு கொள்ளலாம்.

எஸ்.மணிகண்டன் பி.ஏ., பி.எல்.,

ஆசிரியர்,

ஆயுதஎழுத்து மாத இதழ்

சென்னை.